தற்போது நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சனையைக் கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள நிலையில், கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தவெக அரசு சார்பாக அமைச்சர் செங்கோட்டையன் இபிஎஸ்-ஐ வச்சுச் செய்து செம பதிலடி கொடுத்துள்ளார்.

“இபிஎஸ் ஆட்சியிலயும் இதான் நடந்துச்சு! அவர் முதலமைச்சராக இருந்த ஆட்சியிலும் இதே மின்வெட்டு நிலைதான் இருந்தது என்பதை எடப்பாடி பழனிசாமி முதலில் மறந்துவிடக் கூடாது” என்று காரசாரமாகக் கிழித்தெறிந்துள்ளார். ​மேலும் மின்வெட்டுக்கான காரணம் குறித்துப் பேசிய அவர், “இப்போது கோடைக்காலம் என்பதால் மின்சாரத்தின் தேவை வழக்கத்தை விட மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் மின்சாரத்திற்கான தேவை பன்மடங்கு அதிகரித்து உள்ளது.

இப்படி பன்மடங்கு கூடுதல் மின்சாரத்தைப் பயன்படுத்தும்போது, அதற்கேற்ப உபகரணங்களும், புதிய கட்டுமானப் பணிகளும் தங்கு தடையின்றித் தேவைப்படுகின்றன” என்று விளக்கமளித்தார். அதோடு நின்றுவிடாமல், “இந்த மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்க தவெக அரசு தற்போது போர்க்கால அடிப்படையில் அதிரடிப் பணிகளைச் செய்து வருகிறது” என்று எடப்பாடி பழனிசாமியின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசியுள்ளார்.