எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றமானது, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது.

இந்நிலையில் அதிமுக விவகாரத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தற்போது முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என சபாநாயகர் அப்பாவு கூறி உள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டப்பேரவைக்கு தனித்துவமான அதிகாரம் இருக்கிறது. சட்டப்பேரவையை நடத்துவது பேரவை தலைவரின் முழு பொறுப்பு. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கும் சட்டமன்ற செயல்பாடுகளுக்கும் தொடர்பு இல்லை என்று அப்பாவு தெரிவித்தார்.