நிலவில் இறங்கிய சந்திரயான், நிலவின் புகைப்படங்களை இஸ்ரோவுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு அனுப்பியுள்ளது. லேண்டர் தென் துருவத்தில் தரையிறங்கும் போது நிலவின் மேற்பரப்பு தெரிந்தது. இதனை தொடர்ந்து லேண்டர் பூஜ்ஜிய உயரத்தை அடைந்தபோது இந்த புகைப்படம் வெளிப்பட்டது.

இந்த புகைப்படங்கள் கிடைமட்ட வேகத்தில் இருந்து செங்குத்து வேகத்திற்கு மாறும்போது சந்திரனில் இருந்து 6 கி.மீ தொலைவில் எடுக்கப்பட்டது. இஸ்ரோ இந்த மேற்பரப்பு புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.