இந்திய வரலாற்று வெற்றியை சந்திராயன் 3 பதிவு செய்துள்ளது. இன்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லென்டர் ரோவர் பிரக்யானை சுமந்து சந்திரனின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கியுள்ளது. சந்திராயன் 3 லேண்டரை சாப்ட் லேண்டிங் செய்யும் பணி மிகுந்த பரபரப்பு மத்தியில் தற்போது வெற்றியடைந்துள்ளது. இத நேரடி ஒளிபரப்பை இஸ்ரோ இணையதளம், யூடியூப் சேனல் மற்றும் டிடி நேஷனல் ஆகியவற்றில் செய்யப்பட்டு வருகின்றது.

நிலவின் மேற்பரப்பில் இருந்து லெண்டரின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நொடி பொழுதுகளை உலகமே வியந்து பார்க்கின்றது. உலகம் முழுவதும் இருந்து இந்தியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.