நிலவில் இறங்கிய சந்திரயான், நிலவின் புகைப்படங்களை இஸ்ரோவுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு அனுப்பியுள்ளது. லேண்டர் தென் துருவத்தில் தரையிறங்கும் போது நிலவின் மேற்பரப்பு தெரிந்தது. இதனை தொடர்ந்து லேண்டர் பூஜ்ஜிய உயரத்தை அடைந்தபோது இந்த புகைப்படம் வெளிப்பட்டது. இந்த புகைப்படங்கள் கிடைமட்ட வேகத்தில் இருந்து செங்குத்து வேகத்திற்கு மாறும்போது சந்திரனில் இருந்து 6 கி.மீ தொலைவில் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவை அடைந்ததை அடுத்து பலரும் சமூக வலைதளங்களில் இது குறித்து மீம்ஸ் செய்து வருகின்றனர். இதில் ஒரு மீம் மிகவும் சுவாரசியமாக நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. ரக்ஷா பந்தன் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பூமி விக்ரம் லேண்டர் வடிவில் நிலவுக்கு ராக்கி கட்டிவிடுவது போல மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மூன்று முறை சந்திரயான் விண்கலங்கள் ஏவப்பட்டு, மூன்றாவது முறை சாதித்து காட்டி இருக்கிறது இஸ்ரோ.