
கேரளா மாநிலம் வளஞ்சேரி என்னும் பகுதியில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்மா என்ற மனைவியும் பஹத் (12) என்ற மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் காரணமாக தற்போது நிலவரம் சரியில்ல.. “கொஞ்சம் நாள் போகட்டும்”. என்ற எண்ணத்தோடு கணவனை விட்டு மனைவி அவரது தாயார் வீட்டுக்கு சென்று தங்கி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று சாகுல் ஹமீது அவரது மனைவியின் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற அவர் மனைவி மற்றும் மாமியாருடன் தகராறு ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில் கோவமடைந்த சாகுல் ஹமீது மகன் கண் முன்னே கோடாரியை வைத்து மனைவி மற்றும் மாமியாரை கடுமையாக தாக்கியதுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மாமியார் மற்றும் மனைவி சம்பவ இடத்திலேயே துடித்துடித்து உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இவர்களது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் அவர்களது உடல் கிடந்துள்ளது.
அதன்பின் அவர்கள் இச்சம்பவத்தை பற்றி காவல்துறையிடம் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காவல்துறையினர் இச்சம்பவத்தை குறித்து வழக்கு பதிவு செய்ததுடன் தலைமறைவான சாகுல் ஹமீதுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.