தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரிய மற்றும் விஜய் சேதுபதி இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த நிலையில் நிறைய குறைகள் மற்றும் தவறுகளோடு தான் படங்களை எடுத்து முடிக்கிறோம் என இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அவர், படங்களை உருவாக்கும் போது படத்தின் கதைக்களமும், ஜனரஞ்சகத் தன்மையும் பாதிக்கப்படாத படி சில சமரசங்களை செய்து கொள்கிறோம். அதனால் அவை சில சமயம் சாதாரண படங்களாக வெளிவரும். சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் படங்களை தான் உருவாக்குகிறோம் என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.