தனது நட்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக நடிகைகள் திரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக மனநஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கோரி  நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த மனுவை ஒரு லட்சம் ரூபாய் அபராததுடன்  தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகை குஷ்பு, நடிகர்கள் சிரஞ்சீவி  கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல திரைப்படபலங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைப்படி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர்  மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோர நடிகை திரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட நிலையில்,

முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்த  நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், அதற்க்கு  வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலிகான்  சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது நடிகை திரிஷா தரப்பில் மூன்று பேருக்கும் எதிராக ஒரே வழக்காக தாக்கல் செய்ய முடியாது எனவும்,  தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை தொடர்ந்து நிபந்தனை அற்ற  மன்னிப்பு கூறினார் எனவும்,  தனது கருத்து எதிர்ப்பு தெரிவித்த எதிர் கருத்துதான் எனவும் வாதிடப்பட்டது.

மன்சூர் அலிகான் தரப்பில் மூன்று பேருக்கும் எதிராகவும் ஒரே வழக்காக தாக்கல் செய்ய முடியும் எனவும்,  தான் பேசிய ,முழு வீடியோவை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  இது தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பதிவு செய்திருப்பதாகவும், இதனை அவதூறாக கருத முடியாது எனவும் விளக்கம் அளித்தார். பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் போது அதற்கு அனைவரும் எதிர்பது மனித இயல்புதான் என்றும்,

இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரி உள்ளார் எனவும்,  உரிமையியல் நடவடிக்கை சட்டப்படி மூன்று பேருக்கு எதிராக ஒரே நேரத்தில் வழக்கு தொடர முடியாது என சொல்லி மன்சூர் அலிகானுக்கு ரூபாய் 1 லட்சம் அபதாரம் விதித்து, அந்த அபதார த் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் எனவும் நடிகர் மன்சூர் கானுக்கு நீதிபதி உத்தரவிட்டிருக்கின்றார்.