நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் தனுஷ். தற்பொழுது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனுஷ் தற்பொழுது ஆங்கிலத்தில் அசால்டாக பேசுகிறார். ஆனால் அவர் நடிக்க வந்தபோது அந்த அளவிற்கு ஆங்கிலம் சரளமாக பேச தெரியாது. மேலும் பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்டு வந்ததால் அவரால் படிப்பை தொடர முடியாமல் போனது.

இதனால் அவர் பட்டப்படிப்பு படிக்க முடியவில்லை என்று நினைத்து வருந்தியுள்ளாராம். இதை அடுத்து அவர் படிக்கவில்லை என்று ஒரு சிலர் சொல்லியும் காட்டுவார்களாம். இதனை தனுஷ் பல பேட்டிகளிலும் கூறியிருக்கிறார். மேலும் ரசிகர்களிடம் தயவு செய்து அட்லீஸ்ட் ஒரு டிகிரியாவது படிச்சிடுங்க என்று பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். எனவே குழந்தைகளை நன்கு படிக்க வையுங்கள், அவர்களுக்கு படிப்பு முக்கியம் என்று அட்வைஸ் செய்துள்ளார் தனுஷ்.