
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த முகுந்த் அடிக்கடி தனது நெருங்கிய நண்பர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு முகுந்த் வழக்கம் போல தனது நண்பரின் வீட்டிற்கு சென்றார். அப்போது நண்பரின் மனைவி குளித்து கொண்டிருந்தார். அதனை பார்த்த முகுந்த் செல்போனில் வீடியோ எடுத்து அந்த பெண்ணை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தனது நண்பர் ஒருவருடன் உல்லாசமாக இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் வேறு வழி என்று அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்தார். சுமார் 15-க்கும் மேற்பட்ட முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர்களின் தொந்தரவு தாங்க முடியாமல் அந்த பெண் தனது கணவரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மிகுந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.