சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பைக் ரேஸர் சைஜூ அறிமுகமாகியுள்ளார். இவர்களின் நட்பு காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளனர்.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட சைஜூ, ஆசை வார்த்தைகளை கூறி அந்தப் பெண்ணை வீடியோ காலில் நிர்வாணமாகத் தோன்றச் செய்துள்ளார்.

அந்த காட்சிகளை ரகசியமாகப் பதிவு செய்த சைஜூ, பின்னர் தனது சுயரூபத்தைக் காட்டி, வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி சுமார் 1.60 லட்ச ரூபாய் வரை பறித்துள்ளார்.

தொடர்ந்து சைஜூ பணம் கேட்டுத் தொல்லை கொடுத்ததால், பாதிக்கப்பட்ட இளம்பெண் தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் புகாரளித்தார். சைபர் க்ரைம் போலீஸார் நடத்திய விசாரணையில், சைஜூ இதே பாணியில் இன்னும் பல பெண்களை ஏமாற்றியிருப்பது அதிர்ச்சிகரமாகத் தெரியவந்தது.

இதையடுத்து சைஜூவின் இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்த போலீஸார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமூக வலைதளங்கள் மூலம் பழகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.