ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணி நெதர்லாந்தை எதிர்கொள்கின்றது. இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகின்றது.

உலக கோப்பையின் முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி ஏற்கனவே வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியிலும்  வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகின்றது. நெதர்லாந்து அணியும் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணிக்கு ஈடு கொடுத்து விளையாட வேண்டும் என்று முனைப்புடன் களமிறங்க உள்ளது.