நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து, மக்கள் நலனை கருத்தில் கொண்டும், தக்காளி விலை குறைந்த விலையில் கிடைக்கும்  நோக்கத்துடனும் தமிழக அரசு ரேஷன் கடைகளில் கிலோ 60க்கு தக்காளியை விற்பனை செய்கிறது.

எனினும் குறைந்த அளவில் விற்பனை செய்வதாக தெரிகிறது. அதன்படி காலை 10 மணிக்கு ரேஷன் கடைக்கு வரும் தக்காளி அரை மணி நேரத்தில் விற்று விடுகின்றன. இதனால் வரிசையில் காத்திருக்கும் மக்கள் ஏமாற்றம் அடைவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.