கேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சலின் எதிரொலியாக தமிழக குமரி – கேரளா எல்லை பகுதிகளில் சுகாதார துறையினர் முகாம்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியின் சூழால், களியக்காவிளை, கோழிவிளை, பளுகல், நெட்டா உள்ளிட்ட ஐந்து இடங்களில் சுகாதார துறையினர் முகாம்கள் அமைத்துள்ளனர்.

ஒவ்வொரு முகாம்களிலும் மூன்று ஷிப்டு முறையில் ஒவ்வொரு ஷிப்டிலும் ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் பத்மநாபபுரம் மற்றும் ஆசாரிப்பள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது.