
ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் மெந்தர் துணை பிரிவின் சாய்ஸ்லா கயானி என்ற கிராமத்தில் புதிதாக பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முகமது குர்ஷித் என்பவர் தனக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் என இருந்த நிலையில் இறுதியாக தனக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால் விரத்தியிலிருந்து உள்ளார்.
இதனால் ஒரு கட்டத்தில் இரண்டு குழந்தைகளையும் கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.