மோசமான நிதி நிலைமை இருந்த சூழலிலும் உத்திரபிரதேசம் மின்கழகம் ஊழியர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. மத்திய ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி 42% மின்சார ஊழியர்களுக்கும் வழங்கப்படும். இதுவரையிலும் மின்சார ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

இப்போது அவர்களின் அகவிலைப்படியானது 4% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தகவலை உத்தரப்பிரதேச பவர் கார்ப்பரேஷன் தலைவர் எம்.தேவ்ராஜ் தெரிவித்தார். உத்தரபிரதேசம் பவர் கார்ப்பரேஷன், மாநில மின் உற்பத்தி கழகம், டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன், ஜல் வித்யுத் நிகம் போன்றவற்றின் அனைத்து விநியோக நிறுவனங்களின் ஊழியர்களும் அகவிலைப்படி உயர்வின் பலனை பெறுவர்.