Jio சினிமாவில் ஆங்கிலம், இந்தி, போஜ்புரி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 7 மொழிகளில் ஒருமாத காலம் நடக்கவுள்ள இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளின் போட்டி ஒளிபரப்ப இருக்கிறது. இந்திய அணியானது, மேற்கிந்திய தீவுகளுக்கு வருகிற ஜூலை 12ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. டொமினிகாவிலுள்ள வின்ட்சர் பார்க் ஜூலை 12-16 முதல் டெஸ்ட் போட்டியும், ஜூலை 20-24 வரை 2-வது டெஸ்ட் போட்டியும் நடைபெற இருக்கிறது.

2-வது டெஸ்ட் போட்டி இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 100-வது டெஸ்ட் போட்டியாகும். டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் பின் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 3, 6, 8, 12, 13 போன்ற தேதிகளில் முறையே இந்த போட்டிகள் நடைபெறவுள்ளது. ஜியோ சினிமா ipl 2023 தொடரை இலவசமாக ஒளிப்பரப்பு செய்தது.

2023-ம் வருடம் முதல் 2027-ம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை ஹாட்ஸ்டாரிடமிருந்து ஜியோ சினிமா கைப்பற்றியது. jio சினிமா ஐபிஎல் உரிமையை ரூ.951 கோடி கொடுத்து வாங்கியது. அதோடு ஐபிஎல் தொடரை இலவசமாக ஒளிபரப்பியதால் அதிக பார்வையாளர்களை பெற்றது. இவை ஹாட்ஸ்டாருக்கு மேலும் பின்னடைவை உண்டாக்கியது.

ஜியோ சினிமா கணக்கீட்டின் அடிப்படையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டியை ஒரே நேரத்தில் 3.21 கோடி பார்வையாளர்கள் பார்த்து உள்ளனர். ஜியோ சினிமாவின் இந்த அசூர வளர்ச்சியை அடுத்து அதற்கு போட்டியாக ஹாட்ஸ்டாரும் ஒரு பெரும் அறிவிப்பை வெளியிட்டது. நடப்பு ஆண்டுகளில் அடுத்தடுத்து நடத்தப்படும் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்களை இலவசமாக ஒளிப்பரப்ப டிஸ்னி+ ஹாட்ஸ்டார் முடிவெடுத்தது.