சமூக வலைதளங்களில் அவ்வப்போது வினோதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம், ஆனால் இப்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்களை “நிஜமாகவே டிராகன் வம்சம் இன்னும் உயிரோடு இருக்கிறதா?” என்று யோசிக்க வைத்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஒரு சிறிய ஓணான் போன்ற உயிரி சாதாரணமாக அமர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், அது தனது வாயிலிருந்து திடீரென நெருப்புப் பிழம்புகளைக் கக்குகிறது.

இதைப் பார்த்த பலரும், இது புகழ்பெற்ற போகிமான் கார்ட்டூனில் வரும் ‘சார்மேண்டர்’ (Charmander) என்ற கதாபாத்திரத்தைப் போலவே இருப்பதாக ஆச்சரியப்படுகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Pouya Hashemi (@heypouya)

இந்த வீடியோ தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வரும் நிலையில், இது உண்மையா? அல்லது ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோவா? என்ற விவாதம் ஒரு பக்கம் அனல் பறக்கிறது.

சிலர் இது கலிபோர்னியாவின் லகுனா கடற்கரை பகுதியில் எடுக்கப்பட்டது என்று கூறினாலும், இதற்கு இதுவரை எந்த அறிவியல் பூர்வமான ஆதாரமும் கிடைக்கவில்லை.

உண்மையில் அந்த விலங்கின் அருகில் ஏதேனும் இயற்கை எரிவாயு கசிவு ஏற்பட்டு அதனால் நெருப்பு கிளம்பியிருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் கணித்துள்ளனர்.

எப்படியோ, இந்த ‘நெருப்பு கக்கும் ஓணான்’ வீடியோ தற்போது இணையவாசிகளை ஒரு நிமிடம் திகிலடைய வைத்துள்ளது என்பது மட்டும் நிஜம்.