விமான நிலையங்களில் லக்கேஜ் கட்டணத்தைக் குறைக்க மக்கள் பல வித்தைகளைக் கையாளுவது வழக்கம். ஜாக்கெட் பாக்கெட்டில் துணிகளைத் திணிப்பது, நான்கு சட்டைகளை வரிசையாக அணிவது எனப் பார்த்திருப்போம். ஆனால், அமெரிக்காவின் டாம்பா சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பயணி செய்த காரியம் இப்போது இணையத்தையே அதிர வைத்துள்ளது.
அந்த நபர் தனது தலையில் ஒரு பூனையைத் தொப்பி போல அமர வைத்துக்கொண்டு, மிகவும் நிதானமாக நடந்து செல்கிறார். பார்ப்பதற்கு அது ஒரு ஸ்டைலான ‘ஃபர்’ (Fur) தொப்பி போலவே இருப்பதால், அங்கிருந்தவர்கள் முதலில் அது நிஜப் பூனை என்று நம்பவே இல்லை.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “லக்கேஜ் காசு மிச்சம் பண்ண இதுதான் சரியான ரூட்டு போலயே!” என ஆச்சரியத்தில் கமெண்டுகளைக் குவித்து வருகின்றனர். பொதுவாகக் கூட்ட நெரிசல் மிக்க ஏர்போர்ட்டில் பூனைகள் பதற்றமடையும், ஆனால் இந்தப் பூனையோ மிக அமைதியாகத் தலையிலேயே செட்டில் ஆகிவிட்டது.
This person has this whole process down. I can barely get through with my empty carry on. pic.twitter.com/z2bV7uGcoN
— Richie Rich (@gofishh77) March 28, 2026
விமான நிலைய விதிகளின்படி செல்லப்பிராணிகளை முறையாகக் கூண்டுகளில் வைத்துதான் கொண்டு செல்ல வேண்டும் என்றாலும், இந்த ‘லைவ் பூனைத் தொப்பி’ டெக்னிக் இப்போது இணையத்தில் செம ட்ரெண்டிங் ஆகிவிட்டது.
