போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் கொண்டுவரப்பட்ட திட்டம் மெட்ரோ ரயில். இந்த சேவை பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை மெட்ரோ ரயிலுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவாக 2023ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். க்யூ ஆர் குறியீடு பயண அட்டையை பயன்படுத்தி கட்டணமின்றியும், குறியீட்டை பயன்படுத்தி மாரத்தான் பங்கேற்பாளர்கள் வாகனங்களை நிறுத்தியும் இலவசமாக பயணம் செய்யலாம். மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு பயணிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.