
திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சென்ற டிசம்பர் மாதம் தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து விளையாட்டு துறையை மேம்படுத்தும் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையில் 2 நாள் பயணமாக அமைச்சர் உதயநிதி டெல்லிக்கு சென்றார். இந்நிலையில் டெல்லி சென்றிருக்கும் அமைச்சர் உதயநிதி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10:30 மணி அளவில் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.