
பொதுவாகவே செல்லப் பிராணிகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் நாய் என்றால் ரொம்பவே பிடிக்கும். நாய் நம்மை நாவால் நக்கி கொஞ்சி விளையாடியிருக்கும். இப்படி விளையாடும் பொழுது நாய்கள் மனிதர்களை கொஞ்சி முத்தம் கொடுக்கும். நம்மை நாவால் நக்கும். இப்படி செய்வதற்கு ஒரு அறிவியல் பூர்வ காரணம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இப்படி செய்தால் அதற்கு பசிக்கிறது என்பதை நமக்கு உணர்த்த முயற்சிக்கிறது. இது போன்ற நேரத்தில் பசியை புரிந்து கொண்டு அதற்கு சாப்பிட உணவளிக்க வேண்டும்.
சில நேரங்களில் வெளியே சென்றுவிட்டு திரும்பும் பொழுது அல்லது கடைக்கு சென்று விட்டு திரும்பும் போது நாய்கள் ஓடி வந்து மேலே பாய்ந்து நம்மை வருடும். இதற்கான காரணம் அது அந்த அளவுவுக்கு நம் மீது பாசம் வைத்திருக்கிறது. நாய்கள் உணர்ச்சியை வெளிக்காட்ட இது போன்று செய்கிறது. நாய்களின் உடலில் எங்காவது காயம் இருந்தால் அதை வாயால் வருடிக்கொண்டு இருக்கும்.
ஏனெனில் நாய்களின் வாயில் இருக்கும் எச்சில் பாக்டீரியாக்களை கொல்லும் நொதி உள்ளது. இப்படி நாய்கள் செய்து கொண்டிருப்பதை கண்டால் அங்கு ஏதோ இருக்கிறது என்று அர்த்தம். மனிதர்களின் வியர்வையில் சுரக்கும் உப்பின் சுவை நாய்களுக்கு மிகவும் பிடிக்கும். இதனால் நாய்கள் நம்மை நாவால் வருடும்.