
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இது பெரியார் மண் என்ற தலைப்பில் ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, சீமான் சோற்றுக்காக பெரியாரை கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தி பேசுகிறார். சீமான் ஜெயலலிதாவிடம் இருந்து 400 கோடியும் பாஜகவிடமிருந்து 300 கோடியும் வாங்கியுள்ளார். சீமானுக்கு தனக்குத்தானே பேசி சிரிக்கும் பழக்கம் இருக்கிறது. பெரியாரைப் பற்றி அவர் கொச்சையாக பேசிய நிலையில் அதற்கான ஆதாரம் அவரிடம் இருக்கிறதா.? சீமான் பிரபாகரனை சந்தித்ததாக கூறும் நிலையில் அப்படி சந்தித்தது பற்றி இதுவரை யாராவது கூறியுள்ளார்களா.?
சீமான் பாஜகவின் கைக்கூலி மற்றும் அடியாள் இதை நான் கடந்த 10 வருடங்களாக சொல்லி வருகிறேன். நாம் தமிழர் கட்சிக்கு பால் ஊற்றும் நேரம் வந்துவிட்ட நிலையில் அவர்களுடைய இறுதி ஊர்வலம் ஈரோட்டில் தான் நடக்கும். பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையே இறக்குமதி செய்யப்பட்டவர் தான். அவரை எப்போது ஏற்றுமதி செய்யலாம் என்று அந்த கட்சியில் இருப்பவர்களே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை என்ற ஒன்றே இருக்காது என்று அண்ணாமலை கூறும் நிலையில் முதலில் எப்போது பாஜக ஆட்சிக்கு வரும் என்று அவர் கூறட்டும். மேலும் தமிழ்நாட்டில் ஒருபோதும் பாஜகவால் ஆட்சிக்கு வர முடியாது என்று கூறினார்.