“நாம் ஒரு மாபெரும் பேரழிவிற்காகக் காத்திருக்கிறோமா? லட்சக்கணக்கான பயணிகள் நடமாடும் இடத்தில் இப்படியா?” — மும்பை மேற்கு ரயில் பாதையில் உள்ள மிகவும் பரபரப்பான போரிவலி ரயில் நிலைய நடை மேம்பாலத்தின் அடியில், பயங்கர விரிசல்களும் சேதமடைந்த பகுதிகளும் தெரிவது போன்ற காணொளி ஒன்று இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி, ஒட்டுமொத்த மும்பை மக்களையும் இப்போதே மரண பயத்தில் உறைந்துபோக வைத்துள்ளது!
தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த ரயில்வே பாலத்தின் கட்டமைப்பு பலவீனமடைந்து, ஏதேனும் அசம்பாவிதம் நடந்து உயிர்ச்சேதம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சி, அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் கடுமையான பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளனர்.
View this post on Instagram
“>
இணையத்தில் இந்த விவகாரம் காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து, கொதித்துப்போன நெட்டிசன்கள் பலரும் மேற்கு ரயில்வே, பாஜக எம்.எல்.ஏ. சஞ்சய் உபாத்யாய், மும்பை காவல்துறை மற்றும் பி.எம்.சி. ஆகியோரை டேக் செய்து, “ஏதேனும் அசம்பாவிதம் நடந்த பிறகுதான் வருத்தப்படுவீர்களா? அரசு ஏன் இதுபோன்ற பொதுக் கட்டமைப்புகளை ஒவ்வொரு மாதமும் முறையாகச் சோதிப்பதில்லை?” என்று சமூக ஊடகங்களில் தங்களது விரக்தியையும் ஆக்ரோஷத்தையும் கேள்விகளாகக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஆரம்பத்தில் அமைதி காத்த மேற்கு ரயில்வே நிர்வாகம், தற்போது பயணிகளின் அச்சத்தைத் தணிக்கும் வகையில் அதிரடியான தெளிவுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வினீத் அபிஷேக் செய்தியாளர்களிடம் கூறுகையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியை அடுத்து போரிவலி ரயில் நிலைய நடை மேம்பாலம் உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நேரில் சென்று அக்குவேறாக ஆய்வு செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
அந்த ஆய்வின் முடிவில், குறிப்பிட்ட அந்த ரயில்வே மேம்பாலக் கட்டமைப்பில் எந்தவொரு விரிசல்களும் இல்லை என்பதும், அது கட்டமைப்பு ரீதியாக மிகவும் உறுதியாகவும், பொதுப் பயன்பாட்டிற்கு முற்றிலும் பாதுகாப்பானதாகவும் இருப்பது 100% கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
Borivali FOB Inspected, Found Structurally Sound
With reference to a video circulating on social media regarding alleged cracks in the slab of the Foot Over Bridge at Borivali station, Western Railway clarifies that no cracks have been observed in the structure.
The Foot Over… pic.twitter.com/CW2ZFzPQxu
— Western Railway (@WesternRly) May 30, 2026
“>
மேலும், பொதுமக்கள் மற்றும் பயணிகள் யாரும் சமூக வலைதளங்களில் வெளியாகும் இதுபோன்ற சரிபார்க்கப்படாத வதந்திகளையும் தகவல்களையும் பகிர்ந்து தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்றும், துல்லியமான விபரங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ ரயில்வே மூலங்களையே நம்பியிருக்குமாறும் மேற்கு ரயில்வே நிர்வாகம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது!
