தமிழக அமைச்சர் மூர்த்தி மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஆண்ட பரம்பரை என்று கூறிய நிலையில் அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது நீங்கள் ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டை ஆங்கிலேயர்கள் கொள்ளை அடித்துச் சென்ற போது அவர்களுக்கு எதிராக நம் சமூகத்தைச் சேர்ந்த 5,000 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். இந்த வரலாற்றை நாம் புரட்டி பார்க்க வேண்டும். நம்முடைய வரலாறு படிப்பறிவில் நாம் பின்தங்கி இருந்ததால் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த நிலை படி படியாக மாறி வருகிறது. மேலும் நம்முடைய சமூகம் ஆண்ட சமூகம் என்று அமைச்சர் மூர்த்தி கூறியது சர்ச்சையாக மாறியுள்ளது.