இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழ்நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் தனது மௌனத்தை முறியடித்து, “விரைவில் ஒரு நல்ல செய்தியை வழங்க உள்ளேன்” என தெரிவித்தார். பாகிஸ்தானை சேர்ந்த குலாம் ஹைதரின் மனைவியாக இருந்த சீமா, நேபாளம் வழியாக நாட்டை விட்டு வெளியேறு இந்தியாவுக்கு வந்து சச்சின் மீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது  சச்சின் மீனாவுடன் கிரேட்டர் நொய்டாவின் ரபுபுரா பகுதியில் வசித்து வருகிறார்.

சமீபத்தில் சமூக ஊடகங்களில் அவர் குறித்து பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், சீமா மீண்டும் வீடியோ மூலம் தனது நிலையை விளக்கியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியான வீடியோவில், சீமா தனது கணவர் சச்சினுடன் அமர்ந்திருப்பதையும், சச்சின் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கிறதையும் காணலாம். வீடியோவில் சீமா, “ஒரு நல்ல செய்தி உங்களுக்குத் தர போகிறேன். அது கொஞ்சம் தாமதமாக இருக்கலாம்.

ஆனால் அது உங்களை மகிழ்விக்கப்போகும்” என்று கூறியுள்ளார். மேலும், “என்னை நேசிப்பவர்கள் மகிழ்வார்கள், வெறுப்பவர்கள் எப்போதும் வெறுப்பவர்களாகவே இருப்பார்கள்” என கருத்து தெரிவித்துள்ளார். குழந்தைகள் நன்றாக கவனிக்கப்படுகிறார்கள் என்றும், சச்சின் மீனா ஒரு நல்ல தந்தையாக இருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு நேபாளம் வழியாக இந்தியாவிற்கு நுழைந்த சீமா ஹைதர், தனது நான்கு பாகிஸ்தான் குழந்தைகளுடன் இந்தியாவில் சச்சின் மீனாவுடன் வாழ்க்கையைத் தொடங்கினார். ஆன்லைன் கேம் மூலம் சச்சினுடன் ஏற்பட்ட தொடர்பு, நேபாளத்தில் திருமணமாக முடிந்தது. பின்னர் இருவரும் ரபுபுராவிற்கு வந்து இணைந்தனர். சீமா ஹைதர் சமீபத்தில் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.

இந்திய அரசு மற்றும் உத்தரபிரதேச மக்களுக்கு நன்றியைத் தெரிவித்த அவர், “எங்களுக்கு இவ்வளவு நல்ல வாழ்க்கையை வழங்கியதற்காக நன்றி. இந்தியா ஒருபோதும் தவறாக இருக்க முடியாது” என கூறினார். அவரது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. மேலும் பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில் தொடர்ந்து சீமா ஹைதர் இந்தியாவில் வசிக்கும் நிலையில் அது குறித்த ஏதாவது அறிவிப்பை வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.