பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திருத்தணி ரயில் நிலையம் அருகே கொடியேற்றி வைத்துவிட்டு அங்கு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் ஆட்சியில் சட்டமும் இல்லை ஒழுங்கும் இல்லை. தமிழ்நாட்டில் பெண்கள் வெளியில் பாதுகாப்பாக போக முடியாத சூழல் உருவாகியுள்ளது.

5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை, ஒரு கல்லூரி மாணவிக்கு 8 பேர் சேர்ந்து பாலியல் தொல்லை என அடுத்தடுத்து வரும் பாலியல் தொல்லை குறித்த செய்திகள் மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது. ஒருவேளை நான் மட்டும் ஆட்சியில் முதல்வராக இருந்திருந்தால் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை வேறு மாதிரி செய்திருப்பேன். மேலும் அப்போது தான் இது போன்று பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு பயம் இருந்திருக்கும் என்று கூறினார்.