பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியை தங்களுடைய நாட்டிலேயே மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அணியின் தலைவர் முகமது ரிஸ்வான் இந்த பயிற்சியில் உற்சாகமாக பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் ஒரு வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதாவது அதில் ரிஸ்வான் பந்தை சிக்ஸர் அடிக்க அது நேராக பறந்து சென்று அங்கிருந்த வேகப்பந்து பேச்சாளர் ஆன  நஷீம் ஷாவின் செல்போனில் பட்டு அவருடைய செல்போன் உடைந்துள்ளது. இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் இதை ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.