
திருச்சியில் லால்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததாக அமைச்சர் நேரு தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.
அந்தப் பதிவுக்கு கீழ் லால்குடி எம்எல்ஏ சவுந்தர பாண்டியன், தான் இயற்கை எய்தி விட்டதாக கமெண்ட் செய்துள்ளார். இது தொடர்பாக விசாரித்ததில் திமுக நிகழ்ச்சிகள் எதற்கும் தன்னை அழைக்கவில்லை எனவும் இதனால் தான் இறந்து விட்டதாக கமெண்ட் செய்ததாக அவர் கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார்.