17 வருடங்களுக்கு பின் இந்திய அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனை அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சிறப்பு வாய்ந்த இந்திய அணி வழி நடத்தியதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள்.

குறிப்பாக கடைசி ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. மும்பை ஒருபோதும் ஏமாற்றம் அளித்தது கிடையாது . ரசிகர்களுடைய வரவேற்பு எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த உலகக்கோப்பை ஒட்டுமொத்த தேசத்துக்குரியது என்று பெருமிதமாக கூறியுள்ளார்.