பெங்களூரு: ஜே.பி. நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 6 அடி நீளமுடைய நாகப்பாம்பு ஒன்று குளியலறையில் நுழைந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடியிருப்பாளர்கள் அச்சத்துடன் வெளியேறிய நிலையில், தகவல் அறிந்த பாம்பு பிடிப்பு நிபுணர் ரோஹித், மிகுந்த துணிச்சலுடன் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை மீட்டார்.

வைரலாகிய வீடியோவில், ரோஹித் ஒரு கொக்கி முனையுள்ள தடியைப் பயன்படுத்தி நாகப்பாம்பை மெதுவாக தூக்கி, அதன் வாலை கையால் பிடித்து, கருப்பு துணிப் பையில் பாதுகாப்பாக வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. பின், அந்த நாகப்பாம்பு காட்டுக்குள் பாதுகாப்பாக விடப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி, பலரது பாராட்டுகளையும் ஈர்த்துள்ளது. “ஒரு நாகப்பாம்பைக் கையாள சிறந்த முறையை காண்பித்தார்” என ஒருவர் கருத்து தெரிவித்தார். “10 மாத வைப்புத்தொகையுடன் நாகப்பாம்பு இப்போது வாடகை செலுத்த வேண்டும் போல இருக்கிறது” என்ற நக்கலாக கமெண்ட் செய்தி வருகின்றனர்.