பிரபல சினிமா விமர்சகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தீவிர ஆதரவாளருமான பிரசாந்த் ரங்கசாமி, சமீப காலம் வரை அந்தக் கட்சிக்காக சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டவர். நிமிடத்திற்கு நிமிடம் தனது பதிவுகள் மூலம் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்த அவர், தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கைகளுக்கு திறம்பட ஆதரவு அளித்து வந்தார். ஆனால் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கியதுடன், தனது வழக்கமான அரசியல் விமர்சனங்களை நிறுத்தி, நிகழ்ச்சியைப் பற்றிய பதிவுகள் மற்றும் அப்டேட்களை தனது சமூக வலைதளங்களில் பகிர ஆரம்பித்துள்ளார். இதனால் அவரது பக்கங்களைப் பின்தொடரும் பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர் ஒருவர் தனது பதிவில், “தயவு செய்து பிக் பாஸ் போன்ற சினிமா நிகழ்ச்சிகளில் மூழ்கி நேரத்தை வீணடிக்க வேண்டாம். தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் போராட வேண்டிய நேரம் இது; அரசியல் விழிப்புணர்வே நமக்கு தேவையானது” என்று எழுதியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள சினிமா விமர்சகர் பிரசாந்த், “நாம் தமிழர் கட்சி, திமுக எல்லாம் நாட்டை பாதுகாக்க இருக்காங்க — நாம் பிக் பாஸ் பார்த்து ஜாலியாக இருப்போம்!” என கூறியுள்ளார். இந்த உரையாடல் தமிழக வெற்றிக்கழக ஆதரவாளர்களிடையே முக சுலிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த விவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பிரசாந்த் ரங்கசாமியின் நிலைப்பாடு குறித்தும் அரசியல் ஈடுபாடு குறித்தும் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டை காப்பாத்த நாம் தமிழர் – தி.மு.க இருக்கு .
நாம ஜாலியா இருப்போம் ! https://t.co/fE9iiYArvF
— Prashanth Rangaswamy (@itisprashanth) October 5, 2025
