
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. உலகம் முழுவதும் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் பிச்சைக்காரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்நிலையில் இந்தூர் பகுதியில் அதிக அளவில் பிச்சைக்காரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் நகரத்தின் தூய்மையை கெடுப்பதாக மாவட்ட நிர்வாகம் தற்போது குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக பிச்சைக்காரர்களை ஒழித்து கட்ட முடிவு செய்துள்ளனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதாவது 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் இனி யாரும் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடக்கூடாது. அப்படி பிச்சை போட்டால் பிச்சை போடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று அறிவிப்பு வெளிவந்தது.
இது தொடர்பாக கலெக்டர் ஆஷிஷ் சிங் கூறும்போது மாவட்ட நிர்வாகம் இந்தூரில் பிச்சை எடுக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. பிச்சை எடுப்பவர்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படும். பிச்சை போடுவதன் மூலம் அவர்களின் பாவத்தில் பங்கு எடுக்காதீர்கள். ஜனவரி 1ஆம் தேதி முதல் யாராவது பிச்சை போடுவது தெரிந்தால் பிச்சை போடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். இது தொடர்பான பிரச்சார திட்ட அலுவலர் தினேஷ் மிஸ்ரா கூறும்போது, பிச்சை எடுப்பவர்களிடம் வீடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு சில பிச்சைக்காரர்களின் பிள்ளைகள் வங்கிகளில் பணி வருகிறார்கள். ஒரு பிச்சைக்காரரிடம் ஒருமுறை 29 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருந்ததை அறிந்தோம் என்று கூறினார்.
இந்நிலையில் ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இனி யாராவது பிச்சை போட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அதன் பிறகு பிச்சைக் காரர்களை பார்த்து அவர்களை பிடித்துக் கொடுத்தால் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்த நிலையில் இதுவரை மாவட்ட ஆட்சியருக்கு 12 பேர் குறித்து தகவல் வெளிவந்த நிலையில் அதில் உண்மை தன்மை ஆராயப்பட்டு 6 பேருக்கு சன்மானம் வழங்கப்பட்டுள்ளது. பிச்சைக்காரர்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் பிச்சை எடுத்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது டிராபிக் சிக்னலில் ஒருவர் பிச்சை எடுத்ததாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் எதற்காக பிச்சை எடுக்கிறீர்கள் வேறு வேலை செய்ய வேண்டியது தானே என்று கூறிய போது அதற்கு வேறு வேலை செய்ய முடியாத பிச்சை தான் எடுப்பேன் என்று அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் நாட்டின் முதல் முறையாக பிச்சை எடுத்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.