இந்திய நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த கேப்டன் தீபக் சிங்குக்கு சௌரிய சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த தீபக்சிங் கடந்த வருடம் காஷ்மீரில் நடந்த மோதலில் பயங்கரவாதிகளை புறமுதுகிட்டு ஓடச் செய்தவர். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னுடைய படையைச் சேர்ந்த வீரரை தீவிரவாதிகள் சுற்றி வளைத்ததால் அவரைக் காப்பாற்றுவதற்காக தன்னுடைய உயிரையே விட்டுவிட்டார். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்து மற்றொரு வீரரை காக்க தன் உயிரை தியாகம் செய்த தீபக்சிங்கை கவுரவிக்கும் விதமாக சௌரிய சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தாய் நாட்டுக்காக தன் உயிரை நீத்த மேஜர் மன்ஜித்துக்கு கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோபார் மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் நடைபெற்றது. அப்போது அங்கு சிக்கியிருந்த மக்களை காப்பாற்ற ஒரு தீவிரவாதியை சுட்டுக்கொன்றார். தன் உயிர் போவதற்கு முன்பாக ஒரு தீவிரவாதியை சுட்டுக்கொன்று அங்கிருந்த மக்களை காப்பாற்றினார். இதன் காரணமாக பஞ்சாப் ரெஜிமென்டை சேர்ந்த மேஜர் மன்ஜித்துக்கு கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.