
ஹரியானா மாநிலம் பனிபத்தில் ஜனநாயக் ஜனதா கட்சி (JJP) தலைவரான ரவீந்தர் மின்னா, அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கி சூட்டில் வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார். பனிபத்தின் விகாஸ் நகர் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில், ரவீந்தர் மின்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குற்றவாளி தப்பிச் சென்ற நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.