இந்தியாவில் தற்போது புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கத்தில் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பள்ளியில் மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கும் நோக்கத்திலும் அவர்களை மீண்டும் கல்வி பயில ஊக்குவிப்பதையும் புதிய கல்வி கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் சுமார் ஒன்பது புள்ளி முப்பது லட்சம் குழந்தைகள் படிப்பை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளிக்கல்வி இடை நிற்றல் குறித்து லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பள்ளிப்படிப்பை இடை நிறுத்திய மாணவர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதில் 5.3 லட்சம் சிறுவர்கள் மற்றும் 4.27 லட்சம் சிறுமிகள் என மொத்தம் ஒன்பது புள்ளி முப்பது லட்சம் மாணவர்கள் தொடக்கப்பள்ளி படிப்பை இடைநிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்ட மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்ற வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.