
நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் மார்ச் மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் சமீபத்தில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கூட பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் நாடு முழுவதும் 10-ம் பொது தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் ஒன்று பரவி வரும் நிலையில் தற்போது இதற்கு மத்திய கல்வி அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக வந்த தகவலில் உண்மை இல்லை எனவும், பொதுத்தேர்வை ரத்து செய்யும் எந்த ஒரு முடிவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவே இதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.