தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்று பேசிய விஜய் மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்குவோம் என ஒன்றிய அரசு கூறுவது கண்டிக்கத்தக்கது. மும்மொழி கொள்கை விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் பேசி வைத்து கொண்டு நாடகமாடுவதாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கனிமொழி எம்பி கூறியதாவது, மொழி போராட்டத்தின் வரலாறு மிக நீண்ட நெடியது. யாராக இருந்தாலும் அதை தெரிந்து கொண்டு பேச வேண்டும். மொழிக்காக பலரும் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது என கூறியுள்ளார்.