தமிழகத்தில் மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்துவிட்டு பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதா என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்து துறை நஷ்டத்தில் நடப்பதாக காரணம் காட்டி கிராமப்புற பேருந்துகளை நிறுத்தும் இந்த மக்கள் விரோத அரசின் செயலை கண்டிக்கிறோம்.

ஆட்சிக்கு வந்து 24 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையிலும் இதுவரை ஒரு புதிய பேருந்து கூட வாங்கவில்லை. இதுதான் இந்த நிர்வாக திறனற்ற அரசின் சாதனையா என இ பி எஸ் சாடியுள்ளார். மேலும் புதிய பேருந்துகளை வாங்கி மகளிர் பயணம் செய்ய நகர பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் மக்களின் நல்வாழ்வுக்கு எதிராக செயல்பட்டால் அதிமுக வேடிக்கை பார்க்காதே எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.