
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் 13 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியை சிறுவன் மற்றும் 19 வயது வாலிபர் இருவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் இருவரும் சிறுமியின் ஆண் நண்பருக்கு தெரிந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அதாவது 15 வயது சிறுமிக்கும் அவருடைய ஆண் நண்பருக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சனை இருந்துள்ளது.
இதன் காரணமாக அவர்கள் இருவரும் பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி சிறுமையை ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் சிறுவன் மற்றும் 19 வயது வாலிபர் இருவரும் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் மைனர் சிறுமி பலாத்கார வழக்கில் மைனர் சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.