
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்தான் மணிமேகலை. இந்த ஷோவில் விஜே பிரியங்காவுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக அந்த தொலைக்காட்சியில் இருந்து வெளியேறினார் . தற்போது ஜீ தமிழில் பணியாற்றி வருகிறார். அங்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மணிமேகலை தற்போது சென்னையில் மிகப்பெரிய தொகை கொடுத்து சொகுசு அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி உள்ளார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய விஜே மணிமேகலை 3 மாதம் இஎம்ஐ கட்டவில்லை என்று நான்காவது மாதம் வண்டியை எடுத்துக் கொண்டு போயிட்டாங்க. அந்த நேரத்தில் நானும் என்னுடைய கணவர் உசேனும் ஆறுதல் சொல்லிக்கொண்டோம். அப்பொழுது நாங்கள் அடுத்த நான்கு வருடத்தில் ஒரு பிஎம்டபிள்யூ காரை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ஆனால் நாங்கள் நினைத்தபடி இரண்டே வருடத்தில் வாங்கி விட்டோம் என்று கூறியுள்ளார்.