மத்திய அரசு தொகுதி மறு சீரமைப்பு செய்யும்போது தமிழ்நாட்டில் 8 தொகுதிகள் குறையும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 8 தொகுதிகள் குறைந்தால் நாடாளுமன்றத்தில் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்பதால் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி மார்ச் 5-ம் தேதி நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு மொத்தம் 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதாக பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என்று அறிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, நாம் தமிழர் கட்சி பல போராட்டங்களை தனித்து தான் செய்துள்ளது. தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக இப்பொழுது தான் இவர்கள் பேசுகிறார்கள். ஆனால் இது பற்றி நான் 2003 ஆம் ஆண்டே அறிக்கை வெளியிட்டுள்ளேன். மேலும் இந்த கூட்டத்தை நம்பி ஏமாந்தது போதும் கண்டிப்பாக இந்த பிரச்சனை தொடர்பாக நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்று கூறினார்.