நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகும் நிர்வாகிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கட்சியிலிருந்து விலகும் நிர்வாகிகள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நிலையில் கட்சியிலிருந்து விலகும் நிர்வாகிகளையும் சீமான் விமர்சிக்கிறார். சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து  நிர்வாகிகள் பலர் தொடர்ந்து விலகி வருகிறார்கள். சமீபத்தில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் விலகிய நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

அதாவது கட்சிக்காக உழைத்த தங்களை எச்சில் என சீமான் கூறுவதாகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சிப்பதாகவும் அவர்கள் கூறி கட்சியிலிருந்து விலகியுள்ளனர். மேலும் புதிதாக வருபவர்களை கட்சியில் தூக்கி வைத்து கொண்டாடுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இப்படி தொடர்ந்து நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிககள் விலகி வருவது சீமானுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.