முன்னதாக இந்தியா அணியை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி பெருமைபடைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், தற்போது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் 7-0 என்ற வித்தியாசத்தில் தோல்வியடைந்து, வெற்றியின்றி போட்டியிலிருந்து வெளியேறியதை எதிர்கொள்ள முடியாமல் தங்கள் தோல்வியை விமர்சனங்களுடன் எதிர்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் பெண்கள் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாட, அதில் மூன்று மழையால் கைவிடப்பட்டன. மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்ததால், புள்ளிகள் பட்டியலில் பின்தங்கிய அணி போட்டியிலிருந்து வெளியேறியது. குறிப்பாக இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், பாகிஸ்தான் அணியின் இத்தகைய தோல்வி ரசிகர்களிடையே கடும் எதிர்வினையை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி மழையால் 4.2 ஓவர்களில் கைவிடப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா, ஐசிசி மீது தனது கடும் எதிர்வினையை வெளியிட்டுள்ளார்.
Fatima Sana! pic.twitter.com/M4UymUTmk1
— RVCJ Media (@RVCJ_FB) October 25, 2025
“>
“நாங்கள் நான்கு ஆண்டுகள் காத்திருந்து வந்த உலகக் கோப்பை இதுதான். ஆனால் ஒரே பிரச்சனை வானிலைதான். ஐசிசி, எதிர்கால உலகக் கோப்பைகளுக்கு மூன்று நல்ல மைதானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், “நாங்கள் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக இருந்தாலும், பேட்டிங்கில் தோல்வி கண்டோம்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நெருக்கமாக போட்டியிட்டோம். ஆனால் வெற்றி முடியவில்லை. இளைய கேப்டனாக உலகக் கோப்பையிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு நாங்கள் முழுமையாக தயாராக இருப்போம்,” என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
