ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்‌பிறகு எடப்பாடி தரப்பில் அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். அதோடு தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சி போன்றவைகளும் ஈரோடு கிழக்கில் களமிறங்கும் நிலையில் அமமுக கட்சியின் டிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், நான் யாருக்கும் பயந்து வாபஸ் பெறவில்லை என்று கூறியுள்ளார். அவர் குக்கர் சின்னம் கிடைக்கவில்லை. வேறு சின்னத்தில் போட்டியிட்டால் மக்களிடம் குழப்பம் ஏற்படும். இதனால்தான் வேறு சின்னத்தில் நாங்கள் போட்டியிடவில்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அம்மா ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவோம். மேலும் திமுக அரசு 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று கூறினார்.