சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தாங்கள் அளித்த ‘ஆட்சியில் பங்கு’ என்ற வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்தார். சமூகநீதி அரசாக வெற்றி பெற்றுள்ள தங்களது அரசு, பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.

மேலும், இந்தத் தேர்தல் சாதியின் அடிப்படையில் எதிர்கொள்ளப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், முதலமைச்சர் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கி வருவதாகத் தெரிவித்தார். பணபலம் ஆதிக்கம் செலுத்தும் சூழலைத் தாங்கள் தூக்கி எறிந்துள்ளதாகவும், உண்மையான சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் நிர்வாகம் செயல்படும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.