
நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயிலானது இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மாலை 4.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நாளை காலை 7.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட இருந்த ரயிலும் நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் மும்பை-நாகர்கோவில், கன்னியாகுமரி-ஹவுரா ரயில்களில் நவம்பர் மாதத்தில் 3Ac பெட்டிகள் 2 நீக்கப்பட்டு 2 முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகள் இணைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.