நவீன நீர்வழிச்சாலை திட்டத்தின் தலைவர் ஏ.சி.காமராஜ் (90) இன்று மாரடைப்பால் காலமானார். ஆறுகள் இணைப்பு மூலம் புதிய நீர்வழிச்சாலையை உருவாக்கவும், பருவமழை காலங்களில் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் பல திட்டங்களை வகுத்தவர். அவரின் நவீன நீர்வழிச்சாலை திட்டத்தை, கருணாநிதி, கலாம் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர். மேலும், அவர் ‘திருக்குறள் காட்டும் நமது நாகரிகம்’ உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்