தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் உடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. முதலில் டோக்கன்கள் வழங்கப்பட்ட அதன் பிறகு ரேஷன் கடைகள் மூலமாக ஜனவரி 10 முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டன.

டோக்கன் வாங்காதவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நிலையில் மொத்த ரேஷன் அட்டைதாரர்களில் 11.40 லட்சம் பேர் பரிசுத்தொகுப்பு வாங்கவில்லை. இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரர்கள் வாங்காமல் மீதமான மொத்த தொகையான 114 கோடி கூட்டுறவு சங்க அதிகாரிகள் அரசு வங்கி கணக்கில் திரும்ப செலுத்தினர். சொந்த ஊர் சென்ற பலரும் பொங்கல் பரிசு வாங்காதது குறிப்பிடத்தக்கது.