புரட்டாசி மாதம் மஹாலயா அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி 9 நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும். அப்போது கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் நவராத்திரி விழா அடுத்த மாதம் 15 ஆம் தேதி தொடங்குகின்றது.

இதற்காக விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனை திண்டுக்கல்லில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அஷ்டலட்சுமி, கார்த்திகை பெண்கள் மற்றும் மீனாட்சி திருக்கல்யாணம் உள்ளிட்ட செட் பொம்மைகள் மற்றும் பல்வேறு தலைவர்களின் பொம்மைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த பொம்மைகள் 100 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.